என் மனசுக்குள் எப்படி வந்தாய் ??
விளையாட்டு திடலில்
ஒரு சிறுவனாய்
கள்ள கபடமற்று
துள்ளி குதித்து விளையாடியவனை
வீட்டுக்குள் சிறை வைத்தாய்
படிப்பெல்லாம்
பாகற்காயாய் கசக்கும் என்னை
புத்தகங்கள் படைக்க வைத்தாய்
சூது வாது தெரியாதவனை
கண்களிலேயே காமத்து பாலை கற்க வைத்தாய்
காதல் -காமம்
சடு குடு விளையாட்டில்
என்னில் முழுதும் நீயே நிற்கிறாய்
நீ தேவதையா ??
ராட்சசியா ?
என்ற கேள்விக்கு என்னிடத்தில் பதில் இல்லை -ஆனால்
என்னில் நீ மட்டும் தான் நானே
நீயே மாறி நிற்கிறாய்
எனக்கு தெரியாமலே
என் மனசுக்குள் எப்படி வந்தாய் ??
-லி.நௌஷாத் கான்-