படம் பார்த்து கவி:  மனம் குளிர்விக்கும் குளிர் கண்ணாடி

by admin 1
60 views

கள்ளப் பார்வை பார்க்க ஏங்கும்
என்னை,
கீழ் பார்வை பார்த்து வைக்கும் என்னவளை,
குளிர்கண்ணாடியின்
உபயத்தில் முழுதரிசனமே!!
மனம் திடுக்கிட
என் உயிர் பெண்களையும்,
காமுகர்கள் இதே பார்வை பார்த்தால்
மனம் பதறியதே!!
இரவிலும் குளிர்கண்ணாடி அணியும் திரை நாயகர்/களை கண்டு ஓடும் இளைஞர்/நிகள் இவ்வழியை பின்பற்றி தன் வாழ்வை அழிக்கின்றனரே!!
கண் அறுவை சிகிச்சையில் பாதுகாப்பு கருவியான குளிரூட்டி
கதிரவனின் வெப்ப கிரணங்களில் இருந்து காத்து
மனதையும்
குளிரூட்டினால்
மனங்களை பயன்படுத்தினால்
விளையும் நல்முத்துக்களே…
இப்படிக்கு
சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!