நெற்றியில் வியர்வை துளிர்க்க
சமையலை முடித்து
மையில் கொள்ளும் நெய்
மணத்துடன் கருவேப்பிலையை
தாளித்து “உஸ்……….” என்ற இன்னிசையுடன் ரசத்தில் கலக்க
மனம் விரும்பும் மணத்தை
நாசி நுகர்ந்தவுடன் நாபியில்
பசி குழந்தை கிசுகிசு மூட்ட
ஓடினேன் சமையலறையை நோக்கி
தேடி எடுத்த வட்டத் தட்டில்
பாடிக் கொண்டே அன்னத்துடன்
கோடி மணத்துடன்
கருவேப்பிலையின் வாசத்துடன் ரசத்தை கலக்க
பாசமிக்க அம்மா தலையை வருட “சாப்பிடு…..” என்றாள்
தினமும் இது நடந்தாலும்
மனம் விரும்பும் மணத்துடன் கருவேப்பிலை வாங்குவது
என் கடமை என உணர்ந்தேன்.
உஷா முத்துராமன்