மனிதப்பிறப்பென்றாலே
ஏதோ ஒன்றின் மீது
பைத்தியம் இருக்குமாம்.
சிலருக்கு பணப்பைத்தியம்
சிலருக்கு மண் பைத்தியம்
சிலருக்கு பொன் பைத்தியம்
சிலருக்கு புகழ் பைத்தியம்
மீள முடியாத
மதுவின் போதை போல்
எனக்கு உன் மேல்
அளவுக்கடந்த பைத்தியம் என்பதில்
வெட்கம் ஏதுமில்லை!
-லி.நௌஷாத் கான்-