தலைப்பு: மயக்கும் பேரழகி.
வண்ணமயில் தோகை விரித்து, ஆடுவதுப்போல்
உன் கூந்தல் விரிப்பிலே!
எனை மறந்தேன் என் கார் முகிலே!
வானவில்லின் வண்ணக்கலவை கண்டேன்,
அகவல் மயிலின் தோகையிலே!
உன் மதிமுகத்தில்
கண்டேன், பலவித எண்ணங்களின் பிரதிப்பிலிப்பை!
மரகதப் பச்சையும் மயக்கும் வண்ணங்களுமானத் தோகையின் ஆட்டத்தில்,
கார்முகில்களின் வரவை முதலில் உரைக்கும் பிரதிநிதி நீயே!
எம் தமிழ் வீதியில் நீ புரிந்த நடனமதில் மயங்கிய எமைப் போன்றோர் ஏனையோர்!
எம் காதலியாக நீ வரும் நாளும் எந்நாளோ…
இப்படிக்கு
சுஜாதா.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)