மரண வீட்டின் வாசனையை தந்து விட்டு சென்றது உன் பிரிவு… விடுபட முயன்றும் முடியாமல், விடைகொடுக்க நினைத்தும் நிகழாமல் உன் நினைவுகள் மனதை இறுகப் பிடித்தே இருக்கின்றன அங்கிங்கு அசைந்தாடும் ஞாபகங்கள்…
அறுந்து விடப் போகிறதென இறுகப் பற்றிய கயிறாக இருக்கின்ற ஞாபகமாக இருக்கும் நினைவுகள் பிரிவுக்கு பின்னும் தொடர்கின்றன அசைந்தாடும் பாசக்கயிறாய்…
கங்காதரன்
