மல்லிகைப்பூ இட்லியை வேண்டுமென்றே சுட்டு வைக்கிறாய்…
ரசிக்கின்ற என்னை ருசி என்கிறாய்…
பிட்டு வைத்த மிச்ச இட்லி மிருதென்றால் என்னை விடவா என உன் கன்னத்தை காண்பிக்கிறாய்…
உன் கைப் பட்ட பின் எப்படிப் புளிக்கும்… இனிக்கிறதே இட்லி…
ஊரில் விசேஷம் என்றால் வீட்டில் இட்லி… அதும் மூன்றோ நான்கு மட்டுமே… மீத நாட்கள் கூழும், பழைய சோறும் தான்… இட்லிக் கென திருவிழா வேண்டுமென காத்திருந்த நாட்கள் உண்டு…இன்றோ தினசரி பிறப்பே இட்லி உடந்தான்… ஒவ்வொரு விள்ளல் இட்லியும் திருவிழாவை ஞாபகப்படுத்தி விடுகிறது…ஓரத்தில் மஞ்சள் படர்ந்த ஏட்டிலையில், கை ஊதி ஊதி வைச்சுக்க என இட்லி வைக்கும் ஆத்தா வின் அருமை நகர வாழ்க்கையில் ஆறிப் போன உணவினை கேட்டு சாப்பிடும் போது நினைவுக்கு வருகிறது…
ஓரத்தில் மஞ்சள் படர்ந்த ஏட்டிலையில், கை ஊதி ஊதி வைச்சுக்க என இட்லி வைக்கும் ஆத்தா வின் அருமை நகர வாழ்க்கையில் ஆறிப் போன உணவினை கேட்டு சாப்பிடும் போது நினைவுக்கு வருகிறது…
எத்தனையோ முறை சொல்லி விட்டேன் உன் ஊற்றி விடாதே இட்லிகளை உன் கன்னங்கள் போல், தின்ன தோன்றவில்லை கிள்ளத்தான் தோன்றுகிறது…
இன்று சட்னி சரியான காரம் நேற்றைய கோவத்துக்கு இன்றைய தண்டனை எனக்கு… பாவம் என்ன செய்தது இட்லி…
கங்காதரன்