மனித பிரம்மாக்களின்
படைப்பில் செதுக்கி எடுத்து
ஒன்று சேர்த்த ஒவியம் நீ,
பட்டு பாவாடைகலே
பார்த்து பொறாமை படும் அளவில்
திட்டம் போட்டு வடித்த கட்டம்
போட்ட பாவாடை நீ,,,
வெள்ளையும் சிகப்பும்
போட்டியிட்டு சத்தமின்றி
கட்டம் பொட்டுக் கொண்டன
உன்னில்,,,
எத்தனை வயதை
கடந்து போனாலும்
மழலை நினைவுகள்
மனதில் வந்துபோகின்றன
உனை காண்கையில்…!!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.