மழைச்சாரல்
கருமையான சூல்
கொண்ட மேகத்தில்
சலனங்களை சலித்த
சாரலாய் மழைத்துளி
மண்ணோடு மழை
கொண்ட நேசத்தில்
கலந்த சுவாசமாக
வீசும் மண்வாசம்
தூறலின் மெட்டில்
சுருதி பாடும்
தென்றலின் நாதமாக
இடி மின்னல்
முற்றத்து சாரலில்
முந்தி வரும்
முதல் துளியின்
முத்தச் சத்தம்
மழை நின்றாலும்
நிற்காத தூவானத்தில்
வர்ண ஜாலம்
காட்டும் வானவில்
இதமான குளிர்ச்சியில்
தேகம் தீண்டி
கேசம் கலைக்கும்
இதமான தென்றல்
மழையில் நனையும்
பறவையின் ஒலி
தெருவில் குடைகளின்
வண்ண அணிவகுப்பு
மழையை மழையாய்
மழலையாய் ரசித்து
அடுத்த சந்திப்புக்கு
காதலோடு காத்திருக்கும்
பூமியில் புன்னகையோடு நான்…..
பத்மாவதி