தரணி ஈன்ற தங்கம்
மற்சிற்பியின் மதிக்கரங்களால்
மறுவுருவெய்தும் மாணிக்கம்
மாசும் தூசும்
குத்தமும் சுத்தமும்
சுற்றம் சூழ்ந்தினும்
உடையான் உச்சி சூழ்
திரிபதாகை குளிரை
அள்ளித் தோய்த்து
தனக்குள் புதைத்து
ஆறிய நீரையும்
அமிர்தமாக்கிடும் அதிசயம்
ஆழமாய் சொல்கிறதே!
கனிவும் கசடும்
குமிந்த ஞாலம்தனில்
வேற்றெண்ணம் விலக்கி
நற்றெண்ணம் மட்டும்
நின்மதி சேர்த்தால்
மனமும் குணமும்
என்போல் மாணிக்கமாகுமே
உள்ளக்குளுமை
உனையும் சூழுமே!
புனிதா பார்த்திபன்