மாயக் கயிறு
மந்திரக் கயிறு
தந்திரக் கயிறு
எந்திரக் கயிறு
மணல் கயிறு
மனக் கயிறு
பாகக் கயிறு
பாசக் கயிறு
அருணாக் கயிறு
மூக்கனாக் கயிறு
சாணக் கயிறு
கடிவாளக் கயிறு
கால் கயிறே
பூனுல் கயிறு
கிணற்றுக் கயிறு
மரணக் கயிறு
தெரிந்த கயிறு
தெரியாத கயிறு
எத்தனை கயிறுகளில்
எப்படி முடிச்சு விழுந்தாலும்
மஞ்சள் கயிற்றில்
விழும் முடிச்சே
மனிதனுக்கு
மகத்தானது.
செ.ம.சுபாஷினி