பாதாம் இரவில் ஊறி
மறுநாள் நீரோடு சேர்த்து
உண்ண ஆரோக்கியம்
கூடுமாம்
பாதாம் என்றதும்
சிறுவயதில் பச்சை வாதாம்
கொட்டைகள் பொறுக்கி
பாக்கு நிறம் வந்ததும்
தட்டி உண்ணும் அந்த
நாள் ஞாபகம்
வந்ததே நெஞ்சிலே….
எகிறும் விலைவாசி…..
பாதாம் என்ன
ஏழைகளின் அத்தியாவசியமே
கானல் நீராய்…….
நாபா.மீரா