அன்று அடுப்பு எரிக்க
நன்று என தேடினர்
இன்றும் துணிகளைத் தேய்க்க
என்றும் தேவையான
தேடி வாங்கும் தொழிலாளி
உன்னை பல ஆண்டு
கண்காணாமல் பூமியில்
புதைத்து பின் வெளியில் சிதைக்காமல் எடுத்தால்
புதையல் போல மின்னும் வைரம்! தையல்கள் மட்டுமல்ல
புவனமே விரும்பும் நீ
உருவத்தில் சிறிது ஆனால்
அருவத்தில் மிகப்பெரியது
கரியாக இருந்தாலும் பயன்
வைரமாக மாறினாலும் பயன்
தைரியமாக உன்னை
எப்போதும் விரும்புவதில்
தப்பேதும் இல்லை!!!!!
உஷா முத்துராமன்
