முகம் தெரியா நண்பர்களும் உண்டு
முகம் தெரியா எதிரியும் உண்டு
முகம் மறைத்த துரோகிகளும் உண்டு
பெயர் தான் முகநூல்
முகத்தை மறைத்து தான்
பிறர்குற்றம் சொல்லுவர் சிலர்
முகநூல் மாயை
முகநூலில் காரசாரமான பேச்சு
முகத்துக்கு நேரே பார்க்கையில்
தேனொழுக மாறிப் போச்சு
முகநூலில் சிலர் பொழுதுபோக்க இருப்பர்
சிலரோ இங்கு பொழுதையே போக்கிக்கொண்டு இருப்பர்
காட்டுத்தீயின் வேகத்தில் பரவும் விசயங்கள்
உண்மையா பொய்யா என்று கண்டுபிடிப்பது அவரவர் திறமை
நன்மை இருக்கும் அளவிற்கு
தீமையும் இருக்கும் எல்லா இடத்திலும்
நம் கவனம் என்றும் நம் கையில்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
— அருள்மொழி மணவாளன்