படம் பார்த்து கவி: முடிச்சு நல்லது

by admin 1
45 views

அம்மா முடிச்சு வச்ச காசு
சிறுவாடு ஆனது!
சாமிக்கு முடிச்சு வச்ச காசு
காணிக்கை ஆகிறது !
மங்கை கழுத்தில் இட்ட முடிச்சு
திருமணம் ஆனது !
முடிச்சு என்றுமே
முடியும் நம்பிக்கையும்
தொடரும் இணைப்பையும் தருகிறது
முடிச்சு நல்லது!!!

கவிஞர் வாசவி சாமிநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!