பள்ளி சிறுமியாக
புள்ளி மானாக
துள்ளி ஆவலுடன்
புள்ளிக்கோலமிட்டாள்
வள்ளி என்ற பாவை
திருமண வயது அடைந்து வறுமையில் வாடியதால்
பொறுமை இழந்து
வெறுமையாக உணர்ந்தாள்.
காரணம்……….
பருவ வயது ஓடியதால்
முதிர் கன்னி ஆனதில்
ஓடியது இளமை மட்டுமல்ல
வாடிய புள்ளிமான்
ஓட்டமும் தான்
உஷா முத்துராமன்