இன்னும் பல காலம் ஆழமாய் புதைந்திருந்தால் வைரமாய் மாறலாம்
மங்கையரை மகிழ்விக்க பல நகையில் பொருந்திருக்கலாம்
முந்திரி கொட்டையாய் முந்தி கொண்டு வந்ததாலும்
மங்கையரின் கையில் அடுப்பெரிக்கவும்
மருத்துவரின் கையில் மருந்தாகவும்
ஓவியனின் கையில் வரை கோலாகவும்
பலவாறு பயன்பட்டுக் கொண்டே தான் இருக்கிறாய்
கரி கட்டையாக
- அருள்மொழி மணவாளன்
