சிவப்பு நிறம்…
சிக்னலில் ‘நில்’ என்பதன்
அடையாளம்…..
உயிரின் ஓட்டப்பந்தயத்தில்
முக்கியப் பங்களிக்கும்
உதிர சக்தி……
பொதுவாய் அபாயத்தின்
எச்சரிக்கைச் சின்னம்…..
குங்குமமாய் ……
மங்கையர் நெற்றியில்
மங்கலம்…..
மறவர்கள் நெற்றியிலோ
வெற்றிச் சின்னம்!
மொத்தத்தில் முரணான
நிறமோ?
நாபா.மீரா