கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு,
கள்ளிக்குள்ளும் வாசம் உண்டு,
வட்ட பேலையின் மேலே
மஞ்சள் வண்ண
தொட்டியின் உள்ளே,
காட்டான் என ஒதுக்கப்பட்ட
என்னுள்ளும் ஈரம் தாராளமே
முத்து போன்ற பத்து
இதழை பெற்று
கண்ணை கவரும்
ரோஜா நிற வண்ண
மலர்களை ஈன்றேனே…
என்னற்ற முட்கள் என்னுள்
வேய்ந்திருந்தாலும்
ஈர’முள்ள’ தாய் நானே…!!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்
