யேசு ராஜாவின் தலையில் சூட்டப்பட்டது முள் கிரீடம்
நம் பாவங்களை ரத்தம் கொண்டு கழுவினார் அவர்
முடி சூடும் மன்னன் காக்க வேண்டியது மக்களை என்று
நமக்கு படிப்பிக்க பட்ட பாடம் ஆனால் இன்றோ
மக்களை காக்க வேண்டிய அரசோ
தன்னை வளர்த்துக்கொள்ள
எங்கும் முட்களை சிதறி விட்டிருக்கிறது
தனி மனிதன் தன்னைத்தானே முட்களிடம் இருந்து
தன்னை காத்துக்கொள்ள வேண்டும்
- அருள்மொழி மணவாளன்