முள் முரணானது
நம் வாழ்க்கை எனும்
பாதைக்கு பாடம்
கற்று கொடுக்கும்
ஆசான் ஆனது
நாம் கோபத்தில்
பேசும் வார்த்தைகள்
பல இதயங்களை
முள் முள்ளாக குத்தி
வலிக்க செய்யும்
நாம் பேசும் வார்த்தையில்
நிதானம் தேவை என்பதை முள் கற்று
கொடுக்கும்
நடக்கும் பாதையில்
முள் குத்திவிட்து
என்பதற்காக
கால்களை வெட்டி
கொள்வதில்லை
இது போலவே
வாழ்க்கை
எனும் பாதையில்
நமக்கு ஏற்படும்
தோல்வியும்
ஆதலால்
முள் போன்ற
தோல்வியை
அகற்றி
வெற்றி எனும்
இலக்கை நோக்கி
நடை போடுவோம்
வெற்றி நிச்சயம்….
M. W Kandeepan🙏🙏🙏