மனம் சொல்லும் வார்த்தைகள் கண்ணாடி போல,
மயக்கும் எண்ண ஓசைகள் தினம் தினம் ஓட,
உண்மை மறைக்கும் பிம்பங்கள்
பரிதியைக் கண்ட பனி போல,
கரைந்து ஓட தேவை உங்களை சலவை.
வார்த்தைகளில் சிக்கிய பறவையாய்,
விடுதலை கேட்கும் சிந்தனை கருவியாய்,
மயக்கத்தில் வார்த்தைகள் மனதை விழுங்க,
விழிப்புணர்வு மட்டுமே நமக்குத் தேவை..
மூளை சலவையை என்ற ஆயுதம்,
சுய சிந்தனை தான் மனிதனின் சிறப்பு என்பது உணர்வோம்.
உஷா முத்துராமன்
படம் பார்த்து கவி: மூளை சலவை
previous post