உயிரில் கலந்த மூவர்ணமே;
உதிரத்தில் பாதி உன் வர்ணமே;
பலரின் உயிர் தியாகத்தில் வந்த
வடிவமே;
உனை போற்றி பாடுவது என்
பூர்வஜென்ம புண்ணியமே;
இந்திய நாட்டின் ஒவ்வொரு
உயிரில் கலந்த மூச்சுக்காற்றே;
பலரின் தியாகத்தாலும், தைரியத்தினாலும், கிடைத்த உனை
இன்று நாங்கள் சுதந்திரமாய்
சுதந்திர தினமாய் கொண்டாடுகிறோம்,
தைரியமும் தியகமும் நிறைந்ததாலே
காவி நிறம் மேலோங்கி நிற்கிறதோ,
உண்மையையும் தூய்மையையும்
நிலைநாட்டவே வெண்மையை
நடுநிலையாய் கொண்டு பிறந்தாயோ;
பசுமை இந்தியாவை உருவாக்கவும்
இனம் மொழி மதம் பாகுபாடின்றி
ஒற்றுமையுடன் செழிப்புடன்
வாழவே பச்சை வர்ணத்துடனும்
பறக்கின்றாயோ…
வட்ட வடிவ வான்மதியை போல்
முழு நிலவின் மறு உருவமாய்
இருபத்தி நான்கு கம்பிகளை
உன்னுள் தாங்கி தர்மத்தை நிலை
நாட்டும் தாய்நாட்டின்,
உயிர் மூச்சே …
என் உயிர் உள்ள வரை உனை
என் நெஞ்சில் சுமப்பேன் …
✍️ ஆர். இலக்கியா சேதுராமன்.