மரகதம்…
Emerald
மைக்கா பாறையில்
கிடைப்பாய்
சுண்ணாம்பு
பாறையிலும் வெளிப்படுவாய்..
பச்சைக் கல்
மரகதமே –உன் மேல்
இச்சை கொண்டு
பார்க்கிறேன்..
பளிச்சென்று
மின்னுகிறாய்..
விரல்மேல் வந்து
குளிர்ச்சி தருவாயோ.
எட்டா உயரத்தில்
பட்டாக ஜொலித்தாலும்..
நவரத்தின ஒளியே
நல்வரவு உனக்கு!
S. முத்துக்குமார்