சோளம் ஏலத்தில் கிடைத்த ரத்தினம்
சோளம் இயற்கை நமக்கு
கொடுத்த காலத்தின் ஆரோக்கியம் பொரித்தால் நீ
பாப்கான்
சிரித்து வெந்தால் பெப்பர் கான்
பூரித்து இன்று எளிதில்
எனக்கு கிடைக்கும்
உன்னை பார்த்து சிறு
வயதில் ஏங்கியதுண்டு. திரையரங்கில் உன்னை
சுவைத்தபடி ரசிப்பது
உன்னை மட்டுமல்ல
என்னைக் கவரும் திரைப்படங்களையும் தான்
வயலில் உன்னை கண்டாலே வயலின் வாசிக்கும் என் கரங்கள் பச்சையாகவும் உன்னை சுவைப்பேன்
காய்ந்தாலும் பொரித்து சுவைப்பேன்
உஷா முத்துராமன்