இருள் சூழும் நிலவு
பகல் விரும்பும் சூரியன்
அருள் கேட்கும் பக்தன்
பக்தி எதிர்பார்க்கும் கடவுள்
தர்மம் கேட்கும் யாசகன்
தவம் இருக்கும் கொக்கு
ஓடு சுமக்கும் நத்தை
காடு படைத்த விதை
சிலுவை சுமக்கும் இரட்சகன்
இழவை தாங்கும் இடுகாடு
பசிக்காக காத்திருக்கும் வயிறு
ருசிக்காக சில நாக்கு
காதலுக்காக காத்திருக்கும் நீ
காயத்தை பெறப்போகும் நான்!
-லி.நௌஷாத் கான்-
படம் பார்த்து கவி: ருசிக்காக சில நாக்கு
previous post
