Aroobi… அரூபி
அரூபி எனில்
உருவம் இல்லாதது.
உருவம் இல்லாததை
இறைவன் எனலாம்.
உருவம் கண்டு
கவிகள் பிறக்குது
இங்கே…
கவிக்கு உருவம்
தந்தவர் படைத்தவர் தானே..
இங்கு படைப்பவரை
படைப்பதால்
அரூபி இறைவன்
ஆகிறார்…
ரூபம் இல்லாத
அரூபிக்கும்
அழகிய ரூபம்
தருபவன் தான்
படைப்பாளி… அது
ஓவியனோ
கவிஞனோ..
கொண்டாடப்பட
வேண்டியவனே…
அரூபி க்கு வணக்கம்
S. முத்துக்குமார்