வண்ணங்களில் ஒருமித்து
உருவாகும் ஓவியங்களால்
மனதில் ஏற்படும்
புதுஎண்ணம்
கரம் பிடித்தவனின்
மனதுக்கு இதமாக
இசைந்து நடக்கும்
(தூ)காரிகையவள்
பல உருவங்கள் வடிவங்கள்
வண்ணங்கள் எண்ணங்கள்
அன்பான நேசங்கள்
ஆழமான காயங்கள்
இனிமையான நிகழ்வுகள்
ஈரமில்லா நெஞ்சங்களென
படைத்தவனின் வண்ணமான
எண்ணங்களை பிரதிபலித்து குதூகலிக்கும் தூரிகைகளும்
உயிர் கொண்டால்
வருந்தும்…..
சாயம் பூசி சந்தர்ப்பத்திற்கு
ஏற்ப நிறமாறும்
மனித பச்சோந்திகளை எண்ணி…
பத்மாவதி
