ஏனடா எனை வதம் செய்கிறாய்…
உன் பரிமாணங்களோ பல…..
அதில்,
அன்பாக….
அரணாக….
கோபமாக….
சீண்டலாக….
ஆனால், சில நேர ஊடல்களில் பாகல் போல கசந்து விடுகிறாய் என் கள்வனே!
ஊடல் கொள்ளாதே என் கள்வா!
கசப்பாக வேண்டாம் இனிப்பாக என்னுள் நீ கொடியாக படர வாராயோ என் கள்வனே!
கொடியாய் நீ இருக்க
கொழுகொம்பாய் நான் இருப்பேனடா!
நன்றி ❤️
- ஜீவேந்திரன் சாஹித்யா.
