மாதா மாதம்
என்னை
அச்சுறுத்தும்
மாதவிடாய்
வலிகளில்
என்னை தேற்றி
தாங்கும்
சிறந்த வலி நிவாரணி,
என்னவனின்
அன்பான கவனிப்பும்
அவன் தோள் சாயும் சுகமும் …
என் தலை தாங்கும்
அவன் மடியும்
என் கூந்தல் கோதி
இதமாய்
உணர வைக்கும்
அவன் விரல்களும்
என்றால்….
என் உதிரங்களை
தாங்கி
என்னை
நோய் தொற்று
அண்டாமல்
காக்கும்
நிவாரணி
இந்த
நாப்கின்……..
🩷 லதா கலை 🩷