அவசர உலகில்
ஆரோக்கியமாக வாழ
தினம் ஒரு பழம் உண்!
ஆப்பிள் உண்பதால்
மருத்துவரை மறக்கலாம்.
வாழைப்பழம் சாப்பிட
தழைத்த வாழ்வு தரும்.
கொய்யாவின் சுவை
மெய்யாகவே அருமை
இப்படி தெரிந்த கனிகளுள்
ரம்புத்தான் கனியையும்
வம்பு செய்யாமல் உண்.
தெம்பான வாழ்வுடன்
வளமான வாழ்வு
கிடைப்பது உறுதி
உஷா முத்துராமன்