வானத்து கற்பகதரு
தந்த..
அமிர்த கனியோ !
தவறி பூமிக்கு வந்ததெப்படி?
நீ வந்த வேளை _
இதுவரை
நீங்காத வறுமை நீங்கட்டும்!
குறையாது கல்விச்
செல்வம்
வளரட்டும்! குன்றாது
வள்ளல் தன்மை…
பெருகட்டும்!
இசையில் மயங்கும்
மனம் போலே தொழில் விசை பரவட்டும்!
தன் தேவைகளை தானே பூர்த்தி செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை உரமாகட்டும்!
விளைச்சல் பெருக
விளைநிலம் பெருகட்டும்!
அட்சய கனியாய் வந்த
அரத்தியே … வரம் அருள்வாய்… இப் பூமி
நலம் பெற!!!
✍🏼 தீபா புருஷோத்தமன்