எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்….. என்று கவிஞர் பாடினார்..
வானொலியின் தங்கையாய் டிரான்சிஸ்டர்… காதருகில் காமென்ட்ரி.. தென்கச்சியின் இன்றொரு தகவல்..
இன்னும் செய்திகள் வாசிப்பது….
அனைத்துக்கும் மேலாய் அன்பு இலங்கை வானொலி.
மேலடுக்கு மக்களின்
கிராமபோன்… அடுத்து வந்த கேசட் பாடல்கள்.. தேடிப் பிடித்து மெய் மறந்தோம்….
டூ இன் ஒன் என்று பெருமைப் பட்டோம்..
சிடி யும் வந்தன… பாட்டின் மேல்
பயித்தியமானோம்.
அறிவியல் முன்னேற்றம்
தினம் ஒரு அரங்கேற்றம்…
எந்த இசையானாலும்
என்றும் நாம் அடிமை.
இசையால் வசமாகா
இதயம் எது?
S. முத்துக்குமார்