வான்மகள் வதனத்தில் ஒப்பனை
வாழ்த்து பெற நடனமாடி வானோங்கும் புகழுக்காக
வாசம் உள்ள மரங்கள் நிறைந்த
வாதம் இல்லா மலைகளை தான்
வாங்கிய பரிசு மேடையாக்கி வாரி வழங்குகிறாள் புன்சிரிப்பை
வாங்கி அனுபவிப்போம் இலவசமாக
வாளி நிறைந்தது வெளிச்சத்தால்
வாழ்வோம் இயற்கை ரசித்து!
உஷா முத்துராமன்
