காற்றில் காத்தாடி பறக்கும்
விளக்கு பறக்குமா?
தூது வந்ததா? தூரமாய் இருக்கும்
உன்னை பார்க்க தூதாக
வானில் விளக்கை அனுப்பினேன்
நிலா பெண்ணே – அது
உன்னைத் தாண்டி
வின்னைத் தாண்டி
இயற்கை நட்சத்திரங்களுக்கு
இணையாக பறந்து விட்டது
பதிலுக்கு காத்திருந்து
உன்னைப் போல் தேய்கிறேன்
— அருள்மொழி மணவாளன்