வாழ்க்கையொன்றும்
முகப்புத்தகம் அல்ல
Share பட்டன் போல
உன் சோக துக்கங்களை
யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதே
உன் பலவீனம்
அடுத்தவன் பலம் என்பதை
மறந்து விடாதே
அடுத்தவன் அறியாத
உன் பலவீனம் கூட
அவன் பார்வையில்
உனக்கு பலம் தான்
நான்கு சுவர்களுக்கு கூட
காதுண்டு
உன்னை பற்றி
உனக்குள்ளயே
சப்தமில்லாமல் பேசி முடிவெடு
உன் வாழ்க்கை
உன் கையில் தான்
உன் இரகசியம்
அடுத்தவன் அறியாத வரை!
-லி.நௌஷாத் கான்-