படம் பார்த்து கவி: விதையிலிருந்த விருட்சமே

by admin
47 views

விதையிலிருந்த விருட்சமே..
விருட்சத்தின் அனிச்சமே _ உன்னை
அள்ளியெடுத்தது என்
அன்பின் உச்சமே!

உச்சத்தை முகர்ந்தே
அச்சத்தை விலக்கி_
                          உன்
ஆடையென படர்ந்தேன் !

படர நீ கொடியல்லவே
எனை மடியில் தாங்கிய
               வஞ்சியடி!

வஞ்சியென கொஞ்சிய  நின்
மார்பில் சாய்ந்தேனே !
எனை மறந்து நின்
கைகளில் தவழ்ந்தேனே!

தேனென இனித்த
தேவதையே _ இனி குளம்பிக் கோப்பையிலே
குடியிருக்கலாமா!

குடித்து  குளம்பி தாகம் தீர்ந்தாலும்
கோப்பை மட்டும்
இனிக்குமடா !
ஏனெனில் இது நாம்
கூடியிருந்த கோவிலடா!!!

✍🏼 தீபா புருஷோத்தமன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!