விஞ்ஞானியின் வித்தியத்தால்
வியக்க வைத்த விஞ்ஞானம்
விண்வெளியின் விடிவெள்ளிகளை
விதவிதமாய் வகைப்படுத்தி
விழிமகிழ வண்ணப்படங்களையும்
விவரித்து வியப்பூட்டினும்
விரல்நுனியும் விஞ்ஞான
விதை தொடா காலத்தில்
விண்டலத்தைக் கண்டு
விமானக் கோபுரமும்
விசைதிசை கொண்டு
விண்ணகத்து கிரகங்களையும்
வியாபித்து நல்விசைதனை
விண் கடந்து மண் காண
வழிசெய்த மூத்த குடிகளின்
விரிவடைந்த மெஞ்ஞானம்
வானும் பேரண்டமுமே
வாய்பிளந்திடும் பெரும்
விந்தையன்றோ!
புனிதா பார்த்திபன்