விரல்களுக்குள் வீணை மீட்டும்
வித்தையை விந்தையாக்கி
வியப்பில் ஆழ்த்திய
அதிசயம் நீ!
ஆம்
வெப்பத்தின் தாக்கத்திற்கு
கைகொடுக்கும்
மருந்து நீ!
கரித்துணியெனும்
வார்த்தைக்கு
நாகரீகமாகிப் போனாய்!
அடுக்களைக்குள்
உனக்கென இடம்
உண்டாக்கிக் கொண்டாய்
சத்தமில்லாமல்
செய்யும்
நினது சேவை
நித்தமும் தேவை!!
ஆதி தனபால்