விளையாட்டில்தான் நீ “செக்” வைக்கிறாய் சதுரங்க ராணி.
வீட்டிலேயும் ஏன் என்னை வதைக்கிறாய் என் இல்லத்து ராணி?
சதுரங்கத்தில் ராஜா ஒரு கட்டம் மட்டும் நகரும்.
அதைக் காட்டி என்னைக் கட்டம் கட்டுகிறாயா என் ராணி?
எதிராளி ராணியைச் சாய்த்தால் வெற்றிக்கு வழி கோலும்.
ஆனால், என் ராணி உனைச் சாய்த்தால்
என் வழி கோணும்.
ஆதலினால், காதல் செய்வோம். களிப்புற்று வாழ்வோம்.
சிவராமன் ரவி, பெங்களூரு.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)