மாயவனே…
அத்தனை
கூட்டத்திலும்
உன் விழிகள்
எனை தீண்ட
மஞ்சள் பூசிய
என் முகமும்
செவ்வானமாய்
சிவக்குதடா……
காயம் பட்ட
என் முழங்கைக்கு
மஞ்சளை
மருந்திடும்
உன் ஸ்பரிசத்தில்
என் மொத்த
செல்களும்
ஆர்ப்பரிக்குதடா
உன்
தீண்டலில்….
விழியாலும்
விரலாலும்
சீண்டி சிவக்க
வைக்கும்
வித்தையெல்லாம்
எங்கு
கற்றுக் கொண்டாய்???
என்னை மயக்கி
எனக்குள்
உறைய????
🩷 லதா கலை 🩷