விஸ்தாரமாய் அறைகளும்,தென்றலும்
வெளிச்சமும் தீண்டிச் செல்ல சாளரங்களும்
சுற்றியுள்ள வெளிப்பரப்பில் அம்மனுக்கு
உகந்ததாம் வேம்பு .. நெடிதுயர்ந்த தென்னை
மரங்கள்… பச்சைத் தங்கமாம் மூங்கில்….
மா,பலா,வாழை கொண்ட முக்கனித்
தோட்டம்…சுகந்த மணம் பரப்பிடும்
பல வண்ண மலர்கள் இவையெல்லாம்
தாண்டி ஒரு வீட்டிற்கு அழகு
எது தெரியுமா…அன்பும், கருணையும்
மேவிடத் தழைத்திடும் நல்லறம் பொங்கிடும்
இல்லறந்தான்….
நாபா.மீரா
படம் பார்த்து கவி: வீடு
previous post
