காட்டில் இருந்தாய்
கூட்டமாய்…
வேட்டை மனிதன்
கூட்டைக் கலைத்தான்..
வீரமாய் சிரித்தான்
வீழ்ந்தாய் மரித்து..
ஆணவத்தின் வீர
அடையாளமாய்
அங்கம் நீக்கி
முகம் வைத்தான்…
இருட்டில் இருந்தாலும்
பொன்வண்ணம்
கொண்டு –கூர்
பார்வையால்
பயம் காட்டுவாய்.
S. முத்துக்குமார்
