1.தானொரு வீரனென சொல்லிட காளையின் முகத்துடன் ஒரு புகைப் படம்
எத்தனையோ சினிமாக்களில் தோற்ற காளைகள் நிஜத்தில் வெல்லாக் கதாநாயக பிம்பங்களை பிச்சையாக தருகின்றன தன் வலிமை அறியாமல்…
2.கருப்பான பெண்ணை ஒதுக்கிய ஒரு சம காலத்தில் தான் கட்டிளம் காளை கருப்பாக பிறந்தது …
- புகைப் படங்களில் மட்டுமே பார்த்துக் கொள்ளுங்கள் எங்கள் வீரத்தை… இது பீட்டாக் காலம்…
- வீரம் இதுவெனக் காட்டிட அமைதிப் போராட்டம் தேவையாய் இருந்தது…
கங்காதரன்