தமிழவர் தன்மையாம்
வீரமும் ஈரமும்
தகவதை கொணடதாம்
வீறுமிகு காளையும்
கரமதில் காளையை
கவ்விய காளையர்
தரமது தகவுடை
தன்னிகரிலா வீரனாம்
கழனியது விளைந்திட
காளையது உழைத்திடுமே
உழவனது உளமதிலே
உயிருறவாய் உறைந்திடுமே
குமரியின்கவி
சந்திரனின் சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா
