வீரம்
எனச்சொல்லி
வீதியில் விட்டெனை
விரட்டிப் பிடித்தாயே
சிறைபட்ட
சிங்கத்தை
சிதறவிட்டு- உன்
வீரத்தை காட்டு .
உழவோட்டும் உன்
எந்திரத்தை
எதிரே வைத்து
இயக்கிவிட்டு
இரு கைகளால்
அடக்கி காட்டு.
பாவம் எங்களை
விட்டு விடுங்கள்.
வாங்கிய சாபத்திற்கே
வாழ வழியில்லை.
எதற்கு எங்கள் சாபமும்.
செ.ம.சுபாஷினி
