வெண்ணிலா வீதியில் மஞ்சள் நிலாவுடன் ஒரு ஊர்வலம்…
அவளும் நானும் நடை பயில்கிறோம்…
இருளை நகர்த்தி வெளிச்சம் கடத்தி ஒளி உமிழ்கிறது விளக்கு…
காதலை உணர்த்திட வேண்டி உன் கைப் பிடித்து நகர்கிறேன்
நிழலின் நகர்வில் நீ கைகளை இணைக்கிறாய் வெட்கப் படுகிறது காதல்…
கங்காதரன்
