அடர்ந்த வனத்தின் நடுவிலே,
மின்விளக்கு ஒளியிலே,
பனி சாரலில் ஆங்காங்கே
மின்விளக்குகள் விழித்திருக்க,
சிந்தி சிதறி கிடக்கும்
இலை சருகுகளுக்கு இடையிலே,
மர இருக்கையின் மத்தியிலே,
வெண்ணிற தேகத்திலே,
கரிய விழிகளை
மிமைக்காமல் கூட
யாருக்காக காத்து கிடக்கிறாய்
வெண் உழுவையே…!!!
✍️ரா. இலக்கியா சேதுராமன்.