வெற்றிடமெனில் வெறுமையே
வெறுமையெனில் வறுமையோ!
வறுமையெனின் நிறையாமையா?!
நிறையா நிலை
நிலையா நிலையாக
நிலையாய் முயன்று
முயன்றதை விரும்பிடில்
விரும்பியவெலாம் நிரப்பிடலாகுமே
நிரம்பிடில் நிறைவாகுமே
நிறைவானபின் வெறுமையிராதே
வெறுமையிராதெனின் வெற்றிடமல்லவே
வெற்றிடமும்
வெற்றி பெறும் இடமேயாம்
முற்றிலும் முயன்றிடில்
அலமாரிக்கு மட்டுமல்ல இது
அகம் இருக்கும் அனைவருக்குமே
ஜே ஜெயபிரபா