மரங்களை குடைந்தேன்,
மாளிகை வடித்தேன்,
வெள்ளை வர்ணம் அடித்தேன்,
ஒன்றுக்கு துணையாய்
நான்ங்கை இணைத்து
படிகள் அமைத்தேன்,
காற்று வாக்கில்
கவிதைகள் காதில்
வந்து சேர கண்ணாடி
சாளரம் வைத்தேன்,
கண் சிமிட்டா மின்மினி
மின்சார மின்விளக்கு
இரண்டை பதித்தேன்,
கனவில் வந்த என்
கனவு மாளிகையை
நனவாக்கிட கடவுளிடம்
கருணை காட்டுவாயா என்று
மனுயிட்டு காத்துருக்கிறேன்
என் கனவு மாளிகை உருவாகும்
நன் நாளை எதிர்நோக்கி,,,!!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.